Idhayam Matrimony

ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் செங்கோட்டையன் நம்பிக்கை

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2025      தமிழகம்
Sengottaiyan 2025-11-18

Source: provided

மதுரை: ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் அ.தி.மு.க.வில் இணைவது தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது நல்ல முடிவாக இருக்கும். நான் பா.ஜனதா தலைவர்களை நேரில் பார்த்தேன். 

அப்போது பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன. அதனை இங்கு பகிர்வது அரசியல் நாகரிகமாக இருக்காது. பா.ஜனதா தரப்பில் அழைக்கப்பட்ட பிறகுதான் டெல்லி சென்றேன் என சொன்னேன். ஒரு முறை அழைத்தார்கள், 2-வது முறை நானே சந்தித்தேன். மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவது குறித்து தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.

டி.டி.வி.தினகரனுடன் இணைந்து விஜய்யுடன் கூட்டணி அமைக்க போவது குறித்தும், கூட்டணி குறித்த எந்த கருத்தும் சொல்ல இயலாது. எல்லோரும் ஒருங்கிணைய வேண்டும் என்பதே ஆசை. அந்த ஆசை நிறைவேறும் காலம் வெகுவிரைவில் உள்ளது. ஒருங்கிணைப்பு நடைபெறுவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து