எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு: கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி பிரதமர் மோடிக்கு சிறுவன் கடிதம் எழுதியுள்ளது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் பெட்டகேரி கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் சாய்ராம். இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் பெட்டகேரி கிராமத்தில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லாமல் கிராம மக்கள் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையை மாற்ற நினைத்த சிறுவன் சாய்ராம், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளான். அதில், ‘எங்கள் பெட்டகேரி கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை, மழை நேரங்களில் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும் நாங்கள்(கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள்) பள்ளி முடிந்து வந்ததும் அந்த சேற்றில் தான் விளையாடும் நிலை உள்ளது. குடிநீர் சரியாக கிடைப்பதில்லை. எனவே எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்’ என்று எழுதி உள்ளான். சிறுவனின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


