முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலா பயணிகளை ஈர்க்க 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகள்: ஹாங்காங் முடிவு

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      உலகம்
Hong-Kong 2023 02 04

Source: provided

ஹாங்காங் : கொரானாவிற்கு பிறகு உலகம் முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் விதமாக 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க உள்ளதாக ஹாங்காங் அறிவித்துள்ளது. 

ஹாங்காங்கில் இயற்கை எழிலுடன் கண்ணை கவரும் சுற்றுலா தளங்களை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். ஆனால் கொரோனா பரவலுக்கு பிறகு ஹாங்காங் செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. தற்போது உலக நாடுகள் பயண கட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதால் சுற்றுலா துறையை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஹாங்காங் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

ஏற்கனவே சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி இருக்கும் ஹாங்காங்கில் சுற்றுலா வணிகத்தை பெருக்க புதிதாக 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்கவுள்ளதாக ஹாங்காங் அரசு அறிவித்திருக்கிறது. 

இந்த டிக்கெட்டுகள் காத்திக் பசுபிக் ஏர்வேஸ், ஹாங்காங் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹாங்காங் ஏர்லைன்ஸ் விமானங்கள் வாயிலாக வருகிற மார்ச் மாதம் முதல் படிப்படியாக வழங்கப்பட உள்ளது. 

இதற்கிடையே நாளை 6-ம் தேதி முதல் ஹாங்காங் உடனான எல்லைகளை திறப்பதாக சீனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து