முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிக் பாஷ் லீக் போட்டி: பிரிஸ்பேனை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்பெர்த்,

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      விளையாட்டு
Berth-Scorchersberth 2023 0

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போல் பல்வேறு நாடுகளி 20 ஓவர் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இதுவரை 11 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடரின் 12வது சீசன் டிசம்பர் 13ம் தேதி தொடங்கியது. கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்று வந்த இந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று பெர்த்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 4 முறை சாம்பியனான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும், ஒரு முறை சாம்பியனான பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக மெக்ஸ்வீனி 41 ரன்னும், ஹேஸ்ல்லெட் 34 ரன்னும் அடித்தனர். பெர்த் அணி தரப்பில் பெஹண்ட்ராப், கெல்லி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 176 ரன்கள் எடுத்தாக் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம் என்ற இலக்குடன் பெர்த் அணி களம் புகுந்தது. அந்த அணி 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்திருந்தது. 

இதையடுத்து அந்த அணியின் வெற்றிக்கு 12 பந்தில் 20 ரன் தேவைப்பட்ட போது ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் அந்த அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் அடித்து வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. அந்த அணியில் கேப்டன் ஆஷ்டன் டர்னர் 53 ரன்கள் அடித்தார். இறுதியில் நிக் ஹாப்சன் 7 பந்தில் 18 ரன்களும், கூப்பர் கன்னோலி 11 பந்தில் 25 ரன்னும் எடுத்து அணியின் வெற்றியை எளிதாக்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து