முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முதல் 9-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை : ஆய்வு மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      தமிழகம்
Weather-Center 2021 12-05

Source: provided

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து மற்றும் நாலுமுக்கு பகுதியில் தலா 3 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து