முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.எஸ்.எல்.வி. சிறிய ரக ராக்கெட் 10-ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      இந்தியா
Isro 2023 02 06

Source: provided

சென்னை : இஸ்ரோவின் சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் வரும்10-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என தெரிகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 1,750 கிலோ எடையும், ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 4,000 கிலோ எடையும் கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.

சர்வதேச விண்வெளி சந்தையில் சிறிய செயற்கைக் கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, எடை குறைந்த செயற்கைக் கோள்களை (500 கிலோ வரை) புவியின் தாழ்வட்ட சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்ல, சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்களை இஸ்ரோ புதிதாக வடிவமைத்து வருகிறது. இதன் எடை 120 டன். இதற்கான செலவும் ரூ. 30 கோடிக்குள் அடங்கி விடும்.

அதன்படி, சிறிய ரக 2 செயற்கைக் கோள்களுடன் எஸ்.எஸ்.எல்.வி - டி1 ராக்கெட் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், ராக்கெட்டின் சென்சார் செயலிழந்து, தவறான சுற்றுப்பாதையில் செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதால், அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, எஸ்.எஸ்.எல்.வி. வகையில் புதிய ராக்கெட் தயாரித்து விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. அந்த வகையில் புதிதாக எஸ்.எஸ்.எல்.வி.- டி2 ராக்கெட் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை இ.ஓ.எஸ்-07 உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்களுடன் இந்த வாரம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, ராக்கெட் ஏவுதலுக்கான முன்தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. வானிலை சாதகமாக அமைந்தால், வரும் 10-ம் தேதி ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இதில் ஏவப்பட உள்ள இ.ஓ.எஸ்-7 செயற்கைக் கோள் 334 கிலோ எடை கொண்டது. புவி கண்காணிப்பு பணிக்காக அனுப்பப்பட உள்ளது என்று தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து