முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலங்குடியில் ஏப்ரலில் குரு பெயர்ச்சி விழா : கோவில் நிர்வாகம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2023      ஆன்மிகம்
Alangudi 2023 03 17

Source: provided

ஆலங்குடி : ஆலங்குடி குருபகவான் கோவிலில் 2023-ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா ஏப்ரல் 22-ம் தேதி  நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம், (நீடாமங்கலம் அருகில்) ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடையது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். நவக்கிரக ஸ்தலங்களில் அருள்மிகு குருபகவானுக்கு பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. 

வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் வருடம்தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், இந்த ஆண்டு குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு வரும் ஏப்ரல் மாதம் 22-ம் தேதி சனிக்கிழமை பெயர்ச்சி அடைகிறார். அன்றைய தினம் இக்கோயிலில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறவுள்ளது. இவ்விழாவையொட்டி குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழா ஏப்ரல் 16-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வியாழக்கிழமை முடிய முதற்கட்ட லட்சார்ச்சனையும், மீண்டும் குருப்பெயர்ச்சிக்குப் பின் ஏப்ரல் 27-ம் நாள் வியாழக்கிழமை முதல் மே 1-ம் நாள் திங்கள்கிழமை முடிய இரண்டாம் கட்ட லட்சார்ச்சனையும் நடைபெறும். 

தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் விரிவான ஏற்பாடுகளை நாகப்பட்டினம் இணைஆணையர் ராமு உத்தரவின் பேரில், தக்கார் மற்றும் உதவி ஆணையர், செயல் அலுவலர் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து