முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வம்சாவளி நடிகைக்கு தேசிய மனிதநேய விருது : அதிபர் ஜோபைடன் வழங்கினார்

புதன்கிழமை, 22 மார்ச் 2023      உலகம்
Mindy-Kaling 2023 03 22

Source: provided

வாஷிங்டன் : சிறந்த கலைச் சேவைக்காக இந்திய வம்சாவளி அமெரிக்க நடிகைக்கு தேசிய மனிதநேய விருதை அதிபர் ஜோபைடன் வழங்கினார். 

அமெரிக்க அரசால் ஒவ்வொரு ஆண்டும்  தேசிய மனிதநேய விருது வழங்கப்படுகிறது. சிறந்த கலைஞர்கள், புரவலர்கள் மற்றும் குழுக்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்படும். புதிய தலைமுறையினர் மத்தியில் கலையை ஊக்குவிப்பதற்காக முன்மாதிரியாக செயல்பட்ட நபர்களை அடையாளங்கண்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.

அதன்படி 2021-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா வெள்ளை மாளிகையில் நடந்தது.  இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க நடிகையும், தயாரிப்பாளருமான மிண்டி கலிங்கிற்கு (43), இந்த உயரிய விருதை அதிபர் ஜோபைடன் வழங்கி கவுரவித்தார். அதே போல் தேசிய மனிதநேய விருதுகளை அதிபர் ஜோபைடன், 11 பேருக்கு வழங்கி கவுரவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து