முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுநிலை பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு இன்று துவக்கம் : அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      தமிழகம்
Anna-University 2022 12 -09

Source: provided

சென்னை : எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு  இன்று நடைபெற உள்ளது. மேலும் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் டான்செட் மற்றும் சி.இ.இ.டி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு இயக்குனர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பயில, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (டான்செட்) தகுதி தேர்வு நேற்று தொடங்கியுள்ளது. எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு  (சி.இ.இ.டி.ஏ.) இன்று நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் பொது நுழைவுத்தேர்வு இயக்குனர் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

டான்செட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கலந்தாய்வு கோவையில் நடைபெறவுள்ளது. டான்செட் தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்க வேண்டும். சி.இ.இ.டி.ஏ. தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பயில டான்செட் தேர்வு தொடங்கியது.

எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., படிப்புகளில் சேர பொது பொறியியல் நுழைவுத் தேர்வு (சி.இ.இ.டி.ஏ.) இன்று தொடங்கவுள்ளது. டான்செட் தகுதி தேர்வை 34,228 பேர் எழுத உள்ளனர். சி.இ.இ.டி.ஏ. தேர்வுகளை 4,961 பேர் எழுதுகின்றனர். 15 முக்கிய நகரங்களில் உள்ள 40 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. 

இன்னும் ஒருவார காலத்துக்குள் விடைக்குறிப்பு அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் வெளியிடப்படும். விடைக்குறிப்பில் தவறுகள் இருப்பின் மாணவர்கள் திருத்தம் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து