முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      சினிமா
Ponni s-Selvan-2 2023 04 01

Source: provided

பொன்னியின் செல்வன் முதல் பாகம் சென்ற ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை செய்தது. இந்த நிலையில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாவதை ஒட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல், சிம்பு மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த இரண்டாம் பாகத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. விழாவில் பாரதிராஜா பேசுகையில், பொன்னியின் செல்வன் காதலா வீரமா என்று கேட்டார்கள். காதலும் வீரமும் கொண்டது தான் என்பேன். காரணம் மணி ரத்னம் பொன்னியின் செல்வன் கதை மீது கொண்ட காதல். தயாரிப்பாளர் சுபாஸ்கரன் இந்த படத்தை எடுக்க துணிச்சலுடன் வந்தது வீரம். ஆக இரண்டும் சேர்ந்தது தான் பொன்னியின் செல்வன். நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் தான் ஒரு உலக அழகி என்று நிரூபித்துள்ளார். இது சோழருக்கு மட்டுமில்லை பொற்காலம், இது தமிழ் சினிமாவிற்கான பொற்காலம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து