முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலைக்கு பொருள்கள் கொண்டு செல்ல பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2023      ஆன்மிகம்
Sabarimalai 2023-04-13

Source: provided

திருவனந்தபுரம் : பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கோவிலுக்கு தேவையான பொருள்களை கேபிள் கார் மூலம் கொண்டு செல்ல கொல்கத்தாவில் உள்ள ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்களின் போது லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய கோவிலின் அடிவாரமான பம்பையில் இருந்து பொருள்கள் டிராக்டர் மூலம் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். 

இந்த டிராக்டர்கள் மலைப் பாதையில் செல்லும்போது சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. எனவே பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கோவிலுக்கு தேவையான பொருள்களை கேபிள் கார் மூலம் கொண்டு செல்ல தேவசம்போர்டு திட்டமிட்டது. 

இது தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள ஒரு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கேபிள் கார் அமைக்க அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டது. 

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும் கேபிள் கார் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கவுள்ளது.  இதற்கான மண் ஆய்வு பணியும் தொடங்க உள்ளது. இந்த பணி முடிந்ததும் கேபிள் கார் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 days 17 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 day ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து