முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

சனிக்கிழமை, 27 மே 2023      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

கரூர் : கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன் சோதனை மேற்கொண்டனர். சென்னை, கோவை, கரூர், கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் ஐதராபாத்திலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டனர். கோவை உள்பட சில பகுதிகளில் நேற்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

தமிழகத்தில் 'டாஸ்மாக்' மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மீது வரி ஏய்ப்பு புகார்கள் வருமான வரித்துறைக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களுடைய வீடு மற்றும் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்துவதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசிய திட்டம் வகுத்து வந்துள்ளனர்.

அதன்படி தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அசோக்குமார் என்பவரின் பங்களா வீட்டிலும் சோதனை நடந்தது.

இதே போன்று கரூர், கோவை ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட அரசு ஒப்பந்ததாரர்களின் இல்லம் மற்றும் அலுவலகங்கள் உள்பட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. மொத்தம் 40 இடங்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை வளையத்துக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதனிடையே கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முற்றுகையிடப்பட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்தனர். அதேவேளை, வருமானவரித்துறை அதிகாரிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக திமுகவினரும் புகார் அளித்தனர்.

இந்நிலையில், கரூரில் சோதனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நேற்று வழக்குத்தொடரப்பட்டுள்ளது. 9 இடங்களில் வருமானவரித்துறை சோதனை தடுக்கப்பட்டு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரி வழக்கறிஞர் ராமசந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 days 23 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 day ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து