முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டை வளப்படுத்த வரும் பார்லி. தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக பிரார்த்திக்கிறேன் : மதுரை ஆதீனம் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2023      தமிழகம்
Madurai-Adeenam 2023-05-28

Source: provided

புதுடெல்லி : 2024 பாராளுமன்ற தேர்தலிலும் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகி இந்த நாட்டை வளப்படுத்த வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று மதுரை  ஆதீனம் நிருபர்களிடம் தெரிவித்தார். 

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற மதுரை ஆதீனம் நிருபர்களிடம் கூறியதாவது:- 

இதுவரை இருந்த பிரதமர்கள் ஒருவர் கூட எங்களை பாராளுமன்றத்துக்கு அழைக்கவில்லை. நாங்களும் வந்ததில்லை. நாங்கள் எம்.பி.யும், ஆகாமல், எந்த கட்சியிலும் சேராமல் இங்கு வந்து இருக்கிறோம். பாராளுமன்றத்துக்கு ஆன்மீகவாதியை கூப்பிட்ட ஒரே பெருமை பிரதமர் மோடியையே சேரும். 

ஆதீனங்களை பாராளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை வரவழைத்து பெருமைப்படுத்தினார்கள். ஓதுவார் மூர்த்திகளை தேவாரம் பாட வைத்து செங்கோலை நிறுவி இருக்கிறார்கள். 

தமிழர்களை பாதுகாத்ததற்காக நானும் ஒரு செங்கோலை கொடுத்துள்ளேன். பிரதமர் மோடி பல்லாண்டு காலம் வாழ வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலிலும் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகி இந்த நாட்டை வளப்படுத்த வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். 

அவருக்கு வாழ்த்துகளையும் ஆசியையும் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி அனைத்து ஆதினங்களிடமும் அன்பாக நடந்து கொண்டார். மரியாதை கொடுத்தார். எல்லோரிடமும் பேச அவருக்கு நேரம் இல்லை. 

செங்கோல் கொடுப்பது தவறு அல்ல. அந்த காலத்தில் ராஜராஜ சோழன் செங்கோல் வைத்து இருந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் செங்கோல் ஆதீனமே உள்ளது. அரசர்கள் வரும் போது செங்கோல் கொடுப்பது வழக்கம்தான். இதில் மன்னராட்சி, மக்களாட்சி என்ற பாகுபாடு பார்க்கக் கூடாது. இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து