முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுமுறையால் அதிகரித்த பக்தர்கள் வருகை: திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு நீண்டநேம் காத்திருக்கும் சூழ்நிலை

திங்கட்கிழமை, 29 மே 2023      ஆன்மிகம்
Tirupati-2023-05-01

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதாலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

நேரடி இலவச தரிசனத்தில் நேற்று வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் நிரம்பியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். பக்தர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் தரிசன நேரம் அதிகரித்துள்ளது. ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

நேர ஒதுக்கீடு இலவச தரிசன டோக்கன் உள்ள பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று முன்தினம் 78,818 பேர் தரிசனம் செய்தனர். 39,076 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து