முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ். அமைப்புக்கு பிரச்சாரம்: லிபியாவில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்தது கோர்ட்

செவ்வாய்க்கிழமை, 30 மே 2023      உலகம்
Libya 2023-05-30

Source: provided

திரிபோலி : லிபியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு பிரச்சாரம் செய்த 23 பேருக்கு மரண தண்டனையும், 14 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. 

லிபியா நாட்டில் 2011-ம் ஆண்டு அரசுக்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சிக்கு பின்னர், அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை மற்றும் மோதல் போக்கும் காணப்பட்டது. இதனால், சண்டை, உள்நாட்டு குழப்பம் என்ற சூழலை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பயன்படுத்தி கொண்டது. 

ஈராக் மற்றும் சிரியாவில் அடித்தளம் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு லிபியாவிலும் வளர்ச்சி அடைந்தது. இதன் தொடர்ச்சியாக, 2015-ம் ஆண்டு திரிபோலி நகரில் கொரிந்தியா ஓட்டலில் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்தனர். 

இதனை தொடர்ந்து, இந்த அமைப்பு எகிப்திய நாட்டு கிறிஸ்தவர்களை கும்பல், கும்பலாக கடத்தி சென்று, அவர்களை சித்ரவதை செய்து கொடூர கொலை செய்தது. இது பற்றிய பிரசார வீடியோக்களும் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின.  

லிபியாவின் கிழக்கே பெங்காஜி, தெர்னா மற்றும் அஜ்தபியா போன்ற பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. சிர்தே என்ற கடலோர நகரை 2016-ம் ஆண்டு பிற்பகுதியில் தங்கள் வசப்படுத்தியது. பின், பொதுமக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள், அபராதங்களையும் விதித்தது என அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது. 

இந்த படுகொலை பற்றி லிபியாவில் மிஸ்ரதா நகரில் உள்ள கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதில், 23 பேருக்கு மரண தண்டனையும், 14 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

இதுதவிர, ஒருவருக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் 6 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு முன்பே, 3 பேர் உயிரிழந்து விட்டனர். 3 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 days 11 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 day ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து