முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் வன்முறை காரணமாக பதற்றம் நீடிப்பு: கவர்னர், முதல்வருடன் அமித்ஷா ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 30 மே 2023      இந்தியா
Amit-Shah 2023-05-30

இம்பால், வன்முறை காரணமாக பதற்றம் நிலவி வரும் மணிப்பூரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். மாநில கவர்னர் மற்றும் முதல்வருடன் கலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். 

வன்முறை காரணமாக பதற்றம் நிலவி வரும் மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு செய்ய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முடிவு செய்தார். மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு நாகா, குகி சமூகத்தினர் அடங்கிய சிறுபான்மை பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே கடந்த 3-ந்தேதி மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதில் 74 பேர் பலியானார்கள். பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த 27-ந்தேதி முதல் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன் பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வன்முறை காரணமாக பதற்றம் நிலவி வரும் மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு செய்ய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முடிவு செய்தார். அதன்படி அவர் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து இம்பாலுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றடைந்தார். நேற்று அமித் ஷா, மாநில முதல்வர் பிரேன்சிங், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழலை கேட்டறிந்த அமித் ஷா, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.

மேலும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அமித் ஷா, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ஆலோசனையில் ஈடு பட்டனர். வன்முறையை கட்டுப்படுத்த எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து அமித் ஷா இன்று செய்தியாளர் சந்திப்பில் கூற உள்ளார். பின்னர் நாளை டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் மாநில கவர்னர் அனுசுயா உய்கேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாநில உள்துறை மந்திரி நித்யானந்த் ராய், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பாலா, உளவுத்துறை தலைவர் தபன் டேக்கா மற்றும் சில உயர் அதிகாரிகளை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையின் போது மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து