முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகார விவகாரம்: மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

புதன்கிழமை, 31 மே 2023      தமிழகம்
Ma-Suphramanian 2021 12-06

Source: provided

சென்னை : தமிழகத்தில் 3 மருத்துவக்கல்லூரிகள் தனது அங்கீகாரத்தை இழக்கும் நிலை குறித்து மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில், சுகாதார நலப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான செயலி அறிமுக விழா, உலக புகையிலை ஒழிப்பு தினம், மாநில அளவிலான துணை இயக்குனர்களுக்கான தட்டம்மை ரூபெல்லா நோய் நீக்குதல் திட்ட பயிலரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது, 

தமிழகத்தில் ஸ்டான்லி, தருமபுரி, திருச்சி மருத்துவமனைகளில் மாணவர்கள் சேர்க்கை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது போல தொடர்ச்சியாக செய்தி வெளியாகி வருகிறது. கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் சார்பில் ஏற்கனவே விளக்கம் தெரிவித்து என்.எம்.சி.க்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் 4-ம் தேதி காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை கூட்டமும் நடைபெறுகிறது.

இதுமட்டுமின்றி, மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து பேச தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர். முதல்வர் சென்னை வந்தவுடன் அனுமதி பெற்று நானும் துறையின் செயலாளரும் மத்திய அமைச்சர்களை டெல்லி சென்று சந்திக்க உள்ளோம். 

ஏற்கனவே மத்திய அமைச்சர்களை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. மூன்று கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரம் மட்டும் இல்லாமல், திருச்சியில் எய்ம்ஸ் சித்த மருத்துவ கல்லூரி வழங்கவும், புதிய மருத்துவமனை திறப்பு மற்றும் நிதி ஆதாரங்கள் தொடர்பாகவும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து