Idhayam Matrimony

கோவை வன்கொடுமை சம்பவத்தில் கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம்

புதன்கிழமை, 5 நவம்பர் 2025      தமிழகம்
Jail 2024-10-04

கோவை, கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து  கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். தனியார் விடுதியில் தங்கி இருந்து அவர் கல்லூரிக்கு சென்று வந்தார். இவரும், கோவையில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்தி வரும் 25 வயது வாலிபரும் காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் கோவை விமான நிலையத்தின் பின்புறம் பிருந்தாவன்நகர் காட்டு பகுதியில், கடந்த 2-ந்தேதி இரவு காரில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.நள்ளிரவு 11 மணி அளவில் அந்த வழியாக மொபட்டில் 3 பேர் வந்தனர். இருள் சூழ்ந்த பகுதியில் கார் நிற்பதை பார்த்து அருகில் சென்று பார்த்தனர். மேலும் கல்லூரி மாணவியை தூக்கி சென்று 3 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற மாணவியின் காதலன் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவையில் நடந்த இந்த பாலியல் பலாத்கார சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக 7 தனிப்படை அமைக்கப்பட்டு வாலிபர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவு அந்த 3 பேரும் கோவை துடியலூர் வெள்ளக்கிணறு அருகே துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி தரப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய கூடுதல் விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் லதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக எஸ்.ஐ.லதா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து