முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20, ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் 3 புதிய ஜெர்சி வெளியானது

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      விளையாட்டு
1-Ram-50-A

Source: provided

மும்பை: டி20 , ஒருநாள் போட்டி , டெஸ்ட் போட்டி என இந்திய அணியின் 3 புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.

நைக் நிறுவனம்... 

இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக 2016-ல் இருந்து 2020 வரை நைக் நிறுவனம் இருந்தது. அதைத்தொடர்ந்து 2020-ல் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக இருந்துவந்த எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்தது. இந்திய அணியின் மெயின் ஸ்பான்சராக பைஜூஸ்நிறுவனம் இருந்து வருகிறது. 

அடிடாஸ் நிறுவனம்...

இந்நிலையில், புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது.  இந்த நிலையில் அடிடாஸ் நிறுவனம் தயாரித்த இந்திய அணியின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. டி20 , ஒருநாள் போட்டி , டெஸ்ட் போட்டி என இந்திய அணியின் 3 புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஜெர்சியுடன்...

வரும் ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்கும். இந்நிலையில் இந்திய அணியின் புதிய பிரம்மாண்ட ஜெர்சி மும்பை வான்கடே மைதானத்தில் தொங்க விடப்பட்டுள்ளது. இதனை பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன நடக்கிறது அங்கே என ஆச்சர்யமாக கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து