முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க விமானப்படை அகாடமி பட்டமளிப்பு விழாவில் தவறி விழுந்த அதிபர் ஜோபைடன்

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      உலகம்
Joe-Biden 2023-06-02

Source: provided

கொலோராடோ : அமெரிக்க விமானப்படை அகாடமி பட்டமளிப்பு விழாவில் அதிபர் ஜோபைடன் திடீரென தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது 

அமெரிக்க வரலாற்றில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மிக வயதான அதிபராக ஜோபைடன் இருந்து வருகிறார். இந்நிலையில் கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப் படை அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அதிபர் ஜோபைடன் கலந்து கொண்டார். 

அப்போது விழா மேடையின் அருகே தடுமாறி விழுந்த ஜோபைடன் கீழே விழுந்தார். பின்னர் துரிதமாக செயல்பட்ட விமானப்படை அதிகாரிகள் அவருக்கு உதவினர். பின்னர், அதிகாரிகளின் உதவி ஏதுமின்றி, அவர் நடந்து சென்று தமது இருக்கையில் அமர்ந்தார். 

விழாவின் போது சுமார் ஒன்றரை மணி நேரம் அதிபர் ஜோபைடன் நின்ற நிலையில் 921 பேர்களுக்கு பட்டமளித்துள்ளதுடன் அவர்களுடன் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார்

இந்த சூழலில் வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலில், அதிபர் ஜோபைடன் நலமாக இருக்கிறார்.  பாதிப்பு ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விழா நடந்த மேடையில் மணல் மூட்டைகள் இருந்த நிலையில் அதிபர் ஜோபைடன் அந்த மணல் மூட்டை ஒன்றில் மிதித்து கால் தடுமாறி கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து