முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா துணை முதல்வர் வாய்க்கொழுப்போடு பேசி வருகிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. காட்டம்

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      தமிழகம்
Sellur-Raju 2023-06-02

Source: provided

மதுரை : மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா துணை முதல்வர் வாய்க்கொழுப்போடு பேசி வருகிறார் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. காட்டமாக தெரிவித்தார்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவில் நோக்கி செல்லக்கூடிய பக்தர்களுக்கு மேற்கு 2 -ம் பகுதி அ.தி.மு.க.செயலாளர் பைக்காரா கருப்பசாமி ஏற்பாட்டில் அன்னதானத்தை முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. வழங்கி துவக்கி வைத்தார். இதில் பக்தர்களுக்கு இனிப்புகள், 7 வகை உணவுகள், நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டது. 

பின்னர் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏழு வகையான அன்னதானம் வழங்கப்படுகிறது. அனைத்து மதத்தினருடைய விழாக்களிலும் அ.தி.மு.க.சார்பில் அன்னதானம் வழங்கப்படும்., ஜாதி சமய வேறுபாடு இன்றி அ.தி.மு.க. இருந்து வருகிறது. அனைத்து மதத்தினரும் ஒன்றாக இருக்கக்கூடிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க. தான் இருக்கிறது. கிறிஸ்துமஸ் போன்ற கிறிஸ்தவ பெருவிழாக்களின் போதும் தேவையான இடங்களுக்கு சென்று அன்னதானம் வழங்கி வருகிறோம். இஸ்லாமியர்களின் ரம்ஜான் பக்ரீத் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை அதிமுக சார்பில் வழங்கி வருகிறோம். அதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வின் போது மறைந்த எனது மகன் மற்றும் எனது தாயார் பெயரில் இருக்கக்கூடிய ட்ரஸ்ட் சார்பில் எனது குடும்பத்தினருடன் இணைந்து எனது வீட்டருகே ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறேன்.

மேகதாது அனை விவகாரத்தில் கர்நாடக அரசு எடுக்கும் முயற்சி கண்டனத்திற்குரியது.கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் வாய்க்கொழுப்போடு பேசி வருகிறார். அணை கட்டுவது குறித்து டி.கே.சிவக்குமார் பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களுக்கு திமுக அரசு மேகதாது அணை விவகாரத்தில் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. அதன் கூட்டணி கட்சிகளும் உடன் இருந்து துரோகம் இழைத்து வருகின்றன.தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் என்னவென்று தெரியாமலே வெளிநாடு சென்று திரும்பியுள்ளார். 8000 கோடி முதலீடு செய்வார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் 3000 கோடி தான் கொண்டு வந்துள்ளார் என்கின்றார்கள். ஆனால் உண்மை நிலை என்னவென்று எங்களுக்கு தெரியும் பெருமளவிலான முதலீட்டை அவர் தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை. கடந்த ஆட்சி காலத்தில் எங்களது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பல்லாயிரம் கோடி முதலீட்டை தமிழகத்துக்கு இழுத்து வந்தார். வெளிநாடு பயணம் குறித்து வெள்ள அறிக்கை கூட வெளியிட்டார்.தமிழக முதல்வர் அவர்களுடைய வெளிநாட்டு பயணம் வெத்து பயணம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 4 days 5 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 hours ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 3 hours ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து