முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தமிழ் உள்பட 3 மொழிகளுக்கு வர்ணனையாளர்கள் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      விளையாட்டு
Gavaskar 2023-06-02

Source: provided

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வர்ணனையாளர்களை போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பட்டியலை அறிவித்துள்ளது. தமிழ் உள்பட 3 மொழிகளுக்கு வர்ணனையாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ் வர்ணனைக்கு யோ மகேஷ், எஸ்.ரமேஷ், எல்.பாலாஜி மற்றும் எஸ்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரும் 7-ம் தேதி...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

ரசிகர்கள் ஆவல்...

தற்போது 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வர்ணனையாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

ரமேஷ் - பாலாஜி...

இதில் ஆங்கில வர்ணனைக்கு ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன் மற்றும் நாசர் ஹுசைன் ஆகியோரும், ஹிந்தி வர்ணனைக்கு ஹர்பஜன் சிங், சவுரவ் கங்குலி, தீப் தாஸ்குப்தா மற்றும் எஸ். ஸ்ரீசாந்த் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழ் மொழி வர்ணனைக்கு யோ மகேஷ், எஸ்.ரமேஷ், எல்.பாலாஜி மற்றும் எஸ்.ஸ்ரீராம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து