முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலி எண்ணிக்கை 288: ஒடிசா ரயில் விபத்தில் மீட்பு பணிகள் நிறைவு: சீரமைப்பு பணி தொடக்கம்

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      இந்தியா
Coromandel 2023-06-03

Source: provided

புவனேஸ்வர் : தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா ரயில் விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு நிகழ்ந்தது. இதில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 288 பேர் பலியானதாகவும்,. 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நிலவரம் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: ரயில் விபத்துப் பகுதியில் ரயில்வே துறை மேற்கொண்டுவந்த மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தற்போது சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்தனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வழித்தடத்தில் ரயில்கள் மோதலைத் தடுக்கும் அமைப்பான 'கவாச்' கிடைக்கவில்லை.
இதுவரை 100-க்கும் அதிகமானவர்கள் கருணைத் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதற்காக பாலசோர், சோரோ, பஹானாகா ஆகிய இடங்களில் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மார்க்கத்தில் இதுவரை 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 39 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன" என்று தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஒடிசா மாநில அமைச்சர் அடானு சப்யசாசி நாயக், “எங்களின் முதல் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே. மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்குத் தேவையான அனைத்தும் தயாராக இருக்க வேண்டுமென முதல்வர் தெரிவித்துள்ளார்" என்றார்.
ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்லவும், அங்கு இருப்பவர்கள் சென்னை வரவும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் சிறு காயம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள், காலை 8.45க்கு புவனேஷ்வர் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று காலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தவிர்த்து சென்னையில் இருந்து உறவினர்கள் செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் நேற்று இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு புவனேஷ்வர் வரை இயக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து