முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா ரயில் விபத்து: உயிர் தப்பிய பயணிகளுடன் சென்னை வந்த சிறப்பு ரயில் : அமைச்சர்கள் வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2023      தமிழகம்
Minitser 2023-06-04

Source: provided

சென்னை : ஒடிசா மாநிலம், பாலசோரில் ஏற்பட்ட ரயில் விபத்தை தொடர்ந்து  நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ஒடிசாவிலிருந்து சிறப்பு ரயில் மூலம் 137 பயணிகள் சென்னைக்கு வருகை தந்தனர். அவர்களை ரயில் நிலையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்,  மா.சுப்பிரமணியன், வருவாய் நிர்வாக ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் வரவேற்றனர். பயணிகளுக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.
இவர்களில் 36 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 34 பயணிகள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனுப்பி வைக்கப்பட்டவர்களில் 3 பயணிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற பயணிகள் சிறு சிகிச்சைக்குப் பிறகு அவர்களது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழக முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், ஒடிசா மாநிலத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைகின்ற பயணிகளுக்கு தேவையான பரிசோதனை மற்றும் மேல் சிகிச்சை மேற்கொள்ள 30 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிக்கென அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 7 பேருந்துகளும், காவல் துறை மூலம் 50 டாக்ஸிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கூடுதலாக 10 அவசரகால ஊர்தியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் வீல் சேர், ஸ்டிரெச்சர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வருவாய்த் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள், வருகின்ற பயணிகளுக்கு தேவையான உதவிகள் செய்திட பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து