Idhayam Matrimony

ஒடிசா ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை : சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2023      தமிழகம்
Udhayanidhi-2 2023-06-04

Source: provided

சென்னை : கொல்கத்தாவில் இருந்து கடந்த 2-ம் தேதி இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஒடிசா சென்றிருந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் சென்னை திரும்பினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,
நேரடியாக மருத்துமனைக்கு சென்று ஆய்வு நடத்தியதில் அங்கு தமிழர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பிணவறைக்கு சென்று பார்வையிட்டோம். அங்கும் தமிழர்கள் யாரும் இல்லை என்று தெரிய வந்தது. பின்னர் அங்கிருந்த அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினோம்.
 அவர்களும் எங்கும் தமிழர்கள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை. 8 பேரின் தகவல் இல்லாமல் இருந்த நிலையில், 3 பேரின் தகவல் கிடைத்துள்ளது. மற்ற 5 பேரும் நலமுடன் உள்ளதாக, அவர்களுடன் உடன் பயணித்த நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து