முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்டவாளத்தில் டயர் வைத்த சம்பவம்: 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2023      தமிழகம்
Train 2023-04-06

Source: provided

திருச்சி : தண்டவாளத்தில் டயர் வைத்த சம்பம் தொடர்பாக 3 பேரிடம் போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி- சென்னை ரெயில்வே வழித்தடத்தில் லால்குடி அருகே கடந்த 1-ம் தேதி இரவு தண்டவாளத்தில் 2 லாரி டயர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நள்ளிரவு அந்த வழியாக சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அதன் மீது மோதியதில் என்ஜின் அடிப்பகுதியில் இருந்த வயர்கள் துண்டிக்கப்பட்டு பழுதாகி நின்றது.
மேலும் ரெயிலின் என்ஜின் உள்பட 4 பெட்டிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் சம்ப இடத்துக்கு விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 40 நிமிடங்கள் தாமதமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்னை புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து விருதாச்சலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து தண்டவாளத்தின் குறுக்கே டயர்களை வைத்ததில் சதி செயல் ஏதும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
 இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் நேற்று திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித் குமார் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் டயர் இருந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய 3 நபர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் திருச்சியில் ரயில்வே பாதுகாப்பு படையின் ராணுவ பயிற்சி பெற்ற மோப்ப நாய் மேக்ஸ் இந்த சம்பவத்தில் துப்பு துலக்க பயன்படுத்தி வருகின்றனர். விரைவில் இந்த சதிச்செயலில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து