முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனிவரும் தேர்தல்களில் பா.ஜ.க.வை இந்திய மக்கள் வீழ்த்துவார்கள்: ராகுல்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2023      உலகம்
Rahul-Gandhi 2023 03 30

Source: provided

நியூயார்க் : இனிவரும் தேர்தல்களில் பா.ஜ.க.வை இந்திய மக்கள் வீழ்த்துவார்கள் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன், சான் பிரான்சிஸ்கோ நகரங்களுக்கான பயணங்களை முடித்து விட்டு நியூயார்க் சென்ற ராகுல் காந்தி, மான்ஹாட்டானில் உள்ள ஜாவிட்ஸ் மையத்தில் ஒரு பேரணியில் உரையாற்றுகிறார். அதற்கு முன்னதாக அவர் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த விருந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
 பா.ஜ.க.வை எப்படி வீழ்த்த முடியும் என்பதை நாங்கள் கர்நாடகாவில் செய்து காட்டியுள்ளோம். அங்கு பா.ஜ.க.வை படுதோல்வி அடையச் செய்தோம். அதை தோல்வி என்பதைவிட அழிவு என்று சொல்ல வேண்டும். பா.ஜ.க.வை நாங்கள் அழித்தோம். கர்நாடக தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. எல்லா முயற்சிகளையும் செய்தது. அவர்களிடம் அரசாங்கம் இருந்தது. பணம் இருந்தது. எல்லா அதிகாரமும் இருந்தது. ஊடகமும் இருந்தது. ஆனாலும் நாங்கள் அவர்களைத் தோற்கடித்தோம். அடுத்ததாக தெலுங்கானாவில் அவர்களை தோற்கடிப்போம். அதன்பின்னர் தெலுங்கானாவில் பா.ஜ.க.வை காண்பது அரிதாகி விடும்.
தெலுங்கானாவில் மட்டுமல்லாமல் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்திலும் கர்நாடகாவில் பா.ஜ.க.வுக்கு நடந்ததை திருப்பி நடத்துவோம். இதற்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறது. அது இந்தியாவின் புரிதலின் விளைவு. இந்தியா இப்போது ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டுள்ளது. பா.ஜ.க. சமூகத்தில் பரப்பும் வெறுப்போடு முன்னே செல்லக்கூடாது எனப் புரிந்து கொண்டுள்ளது. அதனால் அடுத்து வரும் மாநிலத் தேர்தல்களிலும், 2024 மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.க.வின் அழிவு நடக்கப் போகிறது.
அதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து விட்டன. நாங்கள் ஒரு சித்தாந்தப் போரை எதிர்கொள்ள உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஒருபுறம் பா.ஜ.க.வின் பிரிவினைவாத சித்தாந்தம். மறுபுறம் அன்பும் பிரியமும் கொண்ட காங்கிரசின் சித்தாந்தம். கர்நாடகாவில் பா.ஜ.க. தேர்தல் வேளையில் இருவேறு சமூகங்கள் இடையே வெறுப்பைத் தூண்ட முயற்சித்தது. பிரதமரே அதற்கு முயற்சித்தார். ஆனால் அது பலனளிக்கவில்லை. கர்நாடகா மக்கள் இந்தத் தேர்தல் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் என்று நிரூபித்தனர். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து