முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா லட்கர் காலமானார்: பிரதமர் நரேந்திரமோடி இரங்கல்

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      சினிமா
Sulochana 2023-06-05

Source: provided

மும்பை : பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா லட்கர் காலமானார். அவருக்கு வயது 94. அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த சிலகாலமாக வயது மூப்பு தொடர்பான பிரச்சின்னைகளால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த மூன்று வாரங்களுக்கும் முன்பு, உடல்நிலை மோசமடையவே, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடம் சிகிச்சை பெற்று வந்த சுலோச்சனா, நேற்று முன்தினம் (ஜூன் 04) மாலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

சுலோச்சனா மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “சுலோச்சனா அவர்களின் மறைவு இந்திய சினிமா உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறக்க முடியாத நடிப்புத் திறன் நமது கலாச்சாரத்தை வளப்படுத்தியது மட்டுமின்றி தலைமுறைகள் கடந்தும் மக்களின் அன்பைப் பெற்றது. அவரது சினிமா மரபு அவரது படங்கள் மூலம் வாழும். அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் 1930ஆம் ஆண்டு பிறந்த சுலோச்சனா, 1946ஆம் ஆண்டு திரையுலகில் நுழைந்தார். ‘கட்டி பட்டங்’, ‘மேரே ஜீவன் சாதி’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மராத்தியில் மட்டுமே 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்தியில் அவர் நடித்த ‘கோரா ஆர் காலா’, ‘சம்பூர்ண ராமாயணா’ ஆகிய படங்கள் மிகவும் பிரபலம்.

சினிமாவில் அவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக 1999ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 2004ல் அவருக்கு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 'மகாராஷ்டிர பூஷன்' விருதும் அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து