முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறை கைதிகளுக்கு புதிய உணவு திட்டம்: சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புழல் சிறையில் துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      தமிழகம்
Raghupati 2023-06-05

Source: provided

சென்னை : சிறை கைதிகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட புதிய உணவு திட்டத்தை நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புழல் மத்திய சிறையில் துவக்கி வைத்தார்.

மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, கடந்த 10.04.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், சிறைத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, சிறைவாசிகளின் நலனுக்காக நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சிறைவாசிகளின் உணவுமுறை மற்றும் உணவின் அளவினை, ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என அறிவித்தார்.  

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று (05.06.2023) தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புழல் மத்தியசிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு இப்புதிய உணவுமுறை மற்றும் உணவின் அளவினை மாற்றியமைக்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இவ்விழாவில் சிறைத்துறை டிஜிபி, அமரேஷ் பூஜாரி, ஐபிஎஸ், இரா. கனகராஜ், சிறைத்துறை டிஜஜி, ஆ.முருகேசன், சிறைத்துறை டிஐஜி, சென்னை சரகம்; சிறை கண்காணிப்பாளர்கள் இரா. கிருஷ்ணராஜ் மற்றும் நிகிலா நாகேந்திரன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து