எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ரோம் : போப் ஆண்டவருக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது என்று ஜெமெல்லி ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் செர்ஜியோ அல்பீரி தெரிவித்தார். மேலும் அவரது சந்திப்புகள் அனைத்தும் 18-ம் தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ்(86), சமீப காலமாக கடுமையான வலியாலும், குடல் அடைப்புகளாலும் அவதிப்பட்டு வந்தார். அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் 2 தினங்களுக்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.
அப்போது அவர் குடல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அதன் பேரில் கடந்த புதன் கிழமை அவர் அந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, ஏற்கனவே முன்பு செய்து கொண்ட அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயத்திசுவை நீக்கவும், குடல் இறக்கத்தை சரி செய்யவும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 3 மணி நேரம் நடந்தது.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் போப் ஆண்டவர் இரவில் நிம்மதியாகத் தூங்கினார். நேற்று முன்தினம் வழக்கம் போல கண்விழித்தார். இந்த தகவலை வாடிகன் செய்தி தொடர்பாளர் மேத்தியோ புருனி தெரிவித்தார்.
போப் ஆண்டவருக்கு நடந்த அறுவை சிகிச்சை தொடர்பாக ரோம் ஜெமெல்லி ஆஸ்பத்திரியின் வயிறு மற்றும் நாளமில்லா அறிவியல்கள் துறையின் இயக்குனர் டாக்டர் செர்ஜியோ அல்பீரி கூறுகையில்,
போப் ஆண்டவருக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது. அவருக்கு எந்தச் சிக்கலும் இல்லை. வேறு நோய் எதுவும் கண்டறியப்படவில்லை. அவர் கண் விழித்தார். உஷாராக இருக்கிறார். அடுத்த அறுவை சிகிச்சையை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று தமாஷ் கூட செய்கிறார் என தெரிவித்தார்.
போப் ஆண்டவர் ரோம் ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் 10-வது மாடியில் உள்ள அவருக்கான சிறப்பு அறையில் மேலும் பல நாட்கள் தங்கி இருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது சந்திப்புகள் அனைத்தும் 18-ம் தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
போப் ஆண்டவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஏற்கனவே பெருங்குடலில் 33 செ.மீ.அளவுக்கு வெட்டி அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


