முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர அமைச்சர் ரோஜா மருத்துவமனையில் அனுமதி

சனிக்கிழமை, 10 ஜூன் 2023      தமிழகம்
Roaja-2023-05-01

ஐதராபாத், ஆந்திர அமைச்சர் ரோஜா திடீரென மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்கிய ரோஜா ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். இவர் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வுமாக இருக்கிறார்.

சென்னையில் உள்ள வீட்டில் தங்கியிருந்த அமைச்சர் ரோஜாவுக்கு திடீரென கால் வீக்கம் ஏற்பட்டது. வலியால் அவர் அவதிப்பட்டார். இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரோஜா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ரோஜாவின் கால் வீக்கத்துக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

ரோஜாவின் கால் வீக்கத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதற்காக மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். அப்பல்லோ மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறகு ரோஜாவின் கால் வலி குறைந்திருப்பதாக தெரிகிறது. இதையடுத்து அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து