முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூர்த்தி செய்யப்பட்ட அ.தி.மு.க. உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்களை திரும்ப சேர்ப்பிக்க 21-ம் தேதி கடைசி நாள்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2023      அரசியல்
EPS 2023 03 27

சென்னை, பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப  படிவங்களை கட்சி தலைமை அலுவலகத்தில் சேர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 21-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  

அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் தலைமைக் கழகத்தால், கடந்த 5.4.2023 முதல் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் 4.5.2023 முதல் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பூர்த்தி  செய்யப்பட்ட உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்களை தலைமைக் கழகத்தில் சேர்ப்பிப்பதற்கான காலக் கெடுவை நீட்டித்துத் தருமாறு, 10.9.2023 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 21.9.2023 - வியாழக் கிழமை மாலை 5 மணிவரை நீட்டிக்கப்படுகிறது.  இதுவே  இறுதி  வாய்ப்பாகும்.   

புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுள்ள கட்சியின் உடன்பிறப்புகள் மட்டுமே, கட்சியின் அமைப்புத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும், கட்சி பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றுவதற்கும், தகுதி  உடையவர்கள் ஆவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அந்த அறிவிப்பில் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து