முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஓட்டுநர் வங்கி கணக்கில் டெபாசிட் ஆன 9,000 கோடி ரூபாய்

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2023      தமிழகம்
TMB-Bank-2023-09-21

சென்னை, தனது வங்கி கணக்கில் டெபாசிட் ஆன 9 ஆயிரம் கோடி ரூபாயை கண்டு சென்னையில் கார் ஓட்டுனர் ஒருவர் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார். இதையடுத்து வங்கி அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப பெற நடவடிக்கை மேற்கொண்டனர். 

பழனி அருகே உள்ள நெய்க்காரன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். கால்டாக்சி டிரைவர். இவர் தனது நண்பர்களுடன் சென்னை கோடம்பாக்கத்தில் அறை எடுத்து தங்கி இருந்தார். இவர் கடந்த 9-ம் தேதி மதியம் 3 மணியளவில் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு அதில் தூங்கிக் கொண்டிருந்தார். 

அப்போது அவரது வங்கி கணக்கில் ரூ. 9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக அவரது செல்போனில் குறுந்தகவல் வந்தது. அதில் நிறைய பூஜ்ஜியங்கள் இருந்ததால் அந்த தொகை எவ்வளவு என்பதை அவரால் கணக்கிட முடியவில்லை. 

அவரது வங்கி கணக்கில் ஏற்கனவே ரூ. 105 மட்டுமே இருந்தது. அவர் அந்த குறுந்தகவலை ஆய்வு செய்த போது அது தான் கணக்கு வைத்திருந்த தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் இருந்து வந்ததை உறுதி செய்தார். அதன் பிறகு கணக்கிட்டபோது ரூ. 9 ஆயிரம் கோடி பணம் வந்தது தெரிய வந்தது. இதனால் அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். 

உடனடியாக அந்த பணத்தில் இருந்து ரூ. 21 ஆயிரத்தை தனது நண்பரின் வங்கி கணக்குக்கு அனுப்பினார். இதற்கிடையே சுமார் 30 நிமிடங்களில் அந்த பணம் வங்கியில் இருந்து திரும்ப பெறப்பட்டது. ஆனால் ரூ. 21 ஆயிரம் பணத்தை வேறு கணக்குக்கு ராஜ்குமார் அனுப்பி இருந்ததை வங்கி அதிகாரிகள் கண்டறிந்தனர். 

இதையடுத்து தூத்துக்குடியை சேர்ந்த வங்கி கிளை அதிகாரிகள் ராஜ்குமாரை தொடர்பு கொண்டு பணத்தை தவறுதலாக உங்களது வங்கி கணக்கில் செலுத்தியாகவும் அதனால் மீண்டும் எடுத்துக் கொண்டதாகவும் கூறி ரூ. 21 ஆயிரம் பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். அதை வங்கியில் ஒப்படைக்குமாறும் கூறினார்கள். 

இதற்கிடையில் வங்கியில் ரூ. 9 ஆயிரம் கோடி வந்ததால் பயந்து போன ராஜ்குமார் வக்கீல் ஒருவருடன் தி.நகரில் உள்ள வங்கி கிளைக்கு சென்றார். அங்கு ராஜ்குமார் தரப்பிலும், வங்கி தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருதரப்பினரும் சமாதானமாக செல்லலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 

தி.நகரில் உள்ள வங்கி கிளையில் எங்களுக்குள் சமரசம் ஏற்பட்டது. நான் எனது நண்பருக்கு அனுப்பிய ரூ. 21 ஆயிரம் பணத்தை திருப்பி தர வேண்டாம் என்று வங்கி அதிகாரிகள் கூறினார்கள். மேலும் வங்கி சார்பில் எனக்கு கார் கடனும் வழங்கப்பட்டுள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து