முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயவாடா - சென்னைக்கு புதிய வந்தே பாரத் ரெயில் வரும் 24-ம் தேதி முதல் இயக்கம்

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2023      இந்தியா
Vande-Bharat-train 2023 03

திருப்பதி, ஆந்திர மாநிலம் விஜயவாடா - சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரெயில் வருகிற 24-ம்  தேதி முதல் இயக்கப்பட உள்ளது. 

இதன் தொடக்கவிழா விஜயவாடாவில் நடக்கிறது. இதில் ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர், முதல்வர்  ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 24-ம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் பிரதமர் மோடி வீடியோ கன்பரன்சிங் மூலம் வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார். 

விஜயவாடாவில் இருந்து குறைந்த நிறுத்தங்களுடன் சுமார் 6 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்னை வந்தடையும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வந்தே பாரத் ரெயில் எந்தெந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. 

மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மீண்டும் விஜயவாடாவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. சென்னை - விஜயவாடா இடையே குறைந்த நேரத்தில் ரெயில் இயக்கப்படுவதால் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து