முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் சித்தராமையா தலைமையில் மத்திய அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்த கர்நாடக அமைச்சர்கள் குழு

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2023      இந்தியா
Siddaramaiah-2023-09-21

புது டெல்லி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர்  சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று சந்தித்து பேசினர். 

தமிழகத்திற்கு  காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை உடனே திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. 

இது தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவற்றில் முறையிட்டுள்ளன. இதில் தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கோரி கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் தங்களது தேவைக்கே போதுமான தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் சூழல் இல்லை என்று கர்நாடகா கூறி வருகிறது. 

இதற்கிடையில் டெல்லியில் கர்நாடக முதல்வர்  சித்தராமையா, அம்மாநில அனைத்துக்கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர்.  

இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர்  டி.கே.சிவக்குமார் மற்றும் கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று சந்தித்து பேசினர். 

இந்த சந்திப்பின் போது காவிரி விவகாரத்தில் தங்கள் தரப்பு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கர்நாடக அனைத்துக் கட்சி குழு மத்திய அமைச்சரிடம் வழங்கினர்.  மத்திய அமைச்சர் ஷெகாவத்தை 2 தினங்களுக்கு முன் தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்த நிலையில், கர்நாடக குழு நேற்று சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து