முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை துல்லியமாகக் காட்டும் எக்ஸ்-ரே தான் சாதிவாரி கணக்கெடுப்பு : பிலாஸ்பூரில் ராகுல் காந்தி பேச்சு

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      இந்தியா
Rahul-Gandhi-1 2023-06-01

Source: provided

பிலாஸ்பூர்(சத்தீஸ்கர்) : இந்தியாவை துல்லியமாகக் காட்டும் எக்ஸ்-ரே வாக  சாதிவாரி கணக்கெடுப்பு இருக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். 

சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது, 

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.  சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எக்ஸ்-ரே போன்று இந்தியாவை துல்லியமாகக் காட்டும். தற்போது மத்திய அரசின் அமைச்சக செயலர்கள் 90 பேரில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள். 

எனவே, இதைச் சுட்டிக்காட்டி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஏன் அஞ்சுகிறீர்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகளை பகிரங்கமாக பகிருங்கள் என்று சொன்னேன். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் நடத்துவோம். இது எனது வாக்குறுதி.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் பொதுமக்களே தலைமை வகிக்கின்றனர். நமது அரசுகள் அதானியால் இயங்கவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து