முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லைவ் அப்டேட்ஸ்: இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்வு

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      விளையாட்டு
India 2023-09-27

Source: provided

பெய்ஜிங் : பதக்க பட்டியலில் 6-வது இடத்தில் இந்தியா..! நேற்று 5-வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.

டென்னிஸ்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் 7-6, 1-6, 2-6 என்ற செட் கணக்கில் முதல் நிலை வீரரான சீனாவின் ஜாங் ஜிசனிடம் போராடி தோல்வியடைந்தார்.

குத்துச்சண்டை குத்துச்சண்டை ஆண்கள் 57-63.5 கிலோ பிரிவு ரவுண்ட் ஆப் 16 சுற்றில் கஜகஸ்தான் வீரரிடம் 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் சிவா தபா தோல்வியடைந்தார். அதேபோல், ஆண்கள் 80-92 கிலோ பிரிவு ரவுண்ட் ஆப் 16 சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரரிடம் 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் சஞ்ஜித் தோல்வியடைந்தார்.   

இஸ்போர்ட்ஸ் இஸ்போர்ட்ஸ் லீக் ஆப் லெஜண்ட்ஸ் காலிறுதி சுற்று 4ல் இந்தியா - வியட்நாம் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்தியாவை 2-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வியட்நாம் அபார வெற்றிபெற்றது.

டென்னிஸ்: டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றின் 3ம் போட்டியில் இந்திய வீராங்கனை அங்கிதாவை 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை ஹருகா வெற்றிபெற்றார்.

ஸ்குவாஷ்: ஸ்குவாஷ் பெண்கள் குழு பிரிவு பி 34வது போட்டியில் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் சீனாவை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அபார வெற்றிபெற்றது.

டேபிள் டென்னிஸ்: டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 64 சுற்றின் 6ம் போட்டியில் இந்தியா - தாய்லாந்து மோதின. இப்போட்டியில் தாய்லாந்தை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்திய இந்தியா அபார வெற்றிபெற்றது.

டேபிள் டென்னிஸ்: டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 32 சுற்று 37ம் போட்டியில் இந்தியா - தாய்லாந்து மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் தாய்லாந்தை 3-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய ஜோடி சத்யன் குனசேகரண், மனிகா பத்ரா வெற்றிபெற்றனர்.

டேபிள் டென்னிஸ்: டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 32 சுற்று 42ம் போட்டியில் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் சீனாவை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய ஜோடி ஹர்மீத் ராஜுல், ஸ்ரீஜா வெற்றிபெற்றனர்.

குத்துச்சண்டை: குத்துச்சண்டை பெண்கள் 45-50 கிலோ எடை பிரிவில் பிரிலிம்ஸ் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்தியா - தென்கொரியா அணிகள் மோதின. இப்போட்டியில் தென்கொரிய வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜரீன் நிகாத் வெற்றிபெற்றார்.  

வுஷூ:- வுஷூ பெண்கள் 60 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதி சுற்றில் இந்தியா - வியட்நாம் மோதின. இப்போட்டியில் வியட்நாம் வீராங்கனையை 2-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி அபார வெற்றிபெற்றார். இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய வீராங்கனை தேவி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இந்திய வீராங்கனை தேவி தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடைப்பந்து:- கூடைப்பந்து 3x3 ஆண்கள் ரவுண்ட் ராபின் பிரிவு ஏ போட்டி 33ல் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் இந்தியாவை 22-8 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சீனா வெற்றிபெற்றது.

டென்னிஸ்:- டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டி 4ல் இந்தியா - சீனா மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சீனாவை 6-1, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்திய வீரர்கள் ராம்குமார், சகித் ஜோடி அபார வெற்றிபெற்றது. காலிறுதி சுற்றில் வெற்றிபெற்றதையடுத்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் இந்தியா, தென்கொரியாவை எதிர்கொள்ள உள்ளது.

கைப்பந்து:- கைப்பந்து பெண்கள் பிரிலிமினெரி குரூப் ஏ பிரிவின் 25ம் போட்டியில் இந்தியா - ஹாங்காங் மோதின. இப்போட்டியில் இரு அணிகளும் 26-26 புள்ளிகள் பெற்றதால் போட்டி சமனில் முடிந்தது.

ஸ்குவாஷ்:- ஸ்குவாஷ் ஆண்கள் குழு பிரிவு ஏ போட்டி 36-ல் இந்தியா - பாகிஸ்தான் மோதின. இப்போட்டியில் இந்தியாவை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிபெற்றது.

கூடைப்பந்து:- கூடைப்பந்து பெண்கள் பிரிலிமினெரி ரவுண்ட் சுற்று ஏ போட்டி 6ல் இந்தியா - இந்தோனேசியா மோதின. இப்போட்டியில் இந்தோனேசியாவை 66-44 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து