முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்: சி.டி. ரவி

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      தமிழகம்
c t ravi 20230-09-28

Source: provided

சென்னை:புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும் என்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க. உடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக் கொண்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது 

இந்த நிலையில், புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும் என தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி அவரது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் பா.ஜ.க. பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என அவர் தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என அ.தி.மு.க. திட்டவட்டமாக அறிவித்த நிலையில் சி.டி.ரவி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து