முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துருக்கி பாராளுமன்றம் அருகே நடந்த தாக்குதல்: துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 1 அக்டோபர் 2023      உலகம்
Turkey 2023-10-01

Source: provided

அங்கரா : துருக்கி தலைநகர் அங்கராவில் பாராளுமன்றம் அருகே நேற்று நடந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யார்லிகயா கூறுகையில், 

தனது அமைச்சக அலுவலகம் அருகில் இன்று (நேற்று)ஒரு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதே போல் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு தீவிரவாதி கொல்லப்பட்டார். துருக்கி தலைநகர் அங்கராவில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 

நேற்று காலையில் பயங்கர வெடி சத்தம் கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்டதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குண்டு வெடித்த இடத்தில் பாதுகாப்புப்படையினர் தடுப்பை ஏற்படுத்தியுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் வாகன நிறுத்துமிடங்களில் ஆய்வு செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோடை விடுமுறைக்கு பின்னர் பாராளுமன்றம் திறக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து