முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள்: டெல்லி நினைவிடத்தில் ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, கார்கே மரியாதை

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      இந்தியா
Murmu 2023 04 18

Source: provided

புதுடெல்லி :  மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள் நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 

மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாளான நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதே போல் நாடு முழுவதும் உள்ள மகாத்மா காந்தியின் சிலைகள் பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. 

இதனிடையே, மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா தலைவர் ஓம் பிர்லா, டெல்லி கவர்னர் சக்சேனா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்திக்கு தலைவணங்குகிறேன். காலத்தால் அழியாத அவரது போதனைகள், நம் பாதையை ஒளிரச் செய்கின்றன. ஒட்டுமொத்த மனிதகுலத்திடமும் ஒற்றுமை மற்றும் இரக்க உணர்வை மேம்படுத்த ஊக்குவிக்கும் மகாத்மா காந்தியின் தாக்கம் உலகளாவியது. 

அவரது கனவுகளை நனவாக்க நாம் தொடர்ந்து பாடுபடுவோம். தான் கனவு கண்ட மாற்றத்தின் காரணியாக ஒவ்வொரு இளைஞரும் இருக்கவும், எங்கும் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கவும் மகாத்மாவின் சிந்தனைகள் உதவட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து