முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகைபிடித்தலுக்கு எதிரான சட்டத்தை நீக்குகிறது நியூசிலாந்து

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      உலகம்
smoking

வெலிங்டன், புகைபிடித்தலுக்கு எதிரான சட்டத்தை நீக்க நியூசிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது. புகைபிடித்தலுக்கு எதிரான சட்டத்தை நீக்குவது, பொது சுகாதாரத்தை பாதிக்கும் என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தில் கடந்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியை விட, கிறிஸ்டோபர் லக்சன் தலைமையிலான தேசிய கட்சி அதிக இடங்களை பெற்றது. அதன் பின்னர் 2 சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றியது. 

கூட்டணி கட்சிகளுடனான கூட்டணி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் பதவியேற்பு விழா நடைபெற்றது. கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்டோபர் லக்சன் (53), நாட்டின் பிரதமராக பதவியேற்றார். 

பின்னர் பேசிய பிரதமர் லக்சன், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு முதல் முன்னுரிமை கொடுக்க உள்ளதாக  கூறினார். மேலும், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை, குறிப்பாக சிகரெட்டில் குறைந்த அளவிலான நிகோடின், சில்லறை விற்பனை குறைப்பு மற்றும் இளைஞர்கள் புகைப்பிடிக்க வாழ்நாள் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ரத்து செய்ய புதிய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறினார். 

இந்த நிலையில் புகைபிடித்தலுக்கு எதிரான சட்டத்தை நீக்குவது, பொது சுகாதாரத்தை பாதிக்கும் என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக புகைபிடித்தல் எதிர்ப்பு அமைப்பான ஹெல்த் கோலிஷன் அடோடேரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அரசு கொள்கை முடிவில் இருந்து பின்வாங்குவது நாட்டிற்கே அவமானம். இது பொது சுகாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். புகையிலை தொழிலுக்கு ஒரு பெரிய வெற்றியாக அமையும். மக்களின் உயிரிழப்புகளால் அந்த தொழிலின் லாபம் அதிகரிக்கும் என கூறியுள்ளது.

சிகரெட் மீதான தடையானது சட்டவிரோத விற்பனைக்கான வாய்ப்பை உருவாக்கும் என்றும், பெரும்பாலும் வரி விதிக்கப்படாமல் புழக்கத்தில் இருக்கும் என்றும் லக்சன் கூறியிருக்கிறார். 

நியூசிலாந்தில் முந்தைய ஆட்சியின்போது, இளம் தலைமுறை புகைபிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதாவது, 2008-க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதை இந்த சட்டம் தடை செய்கிறது. இந்த நடவடிக்கையை பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் புகைப்பிடித்தலுக்கு எதிரான அமைப்புகள் பாராட்டின என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 5 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 day ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து