Idhayam Matrimony

முதல் முறையாக உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரூ.51 கோடி பரிசுத்தொகை

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2025      விளையாட்டு
3-Ram-90

Source: provided

மும்பை: உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ.51 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

298 ரன்கள் குவிப்பு...

ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை மாலை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் கிரிக்கெட் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியின் வீராங்கனைகள் 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களை குவித்திருந்தனர்.

லாரா வோல்வார்ட்... 

சேஸிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நிதானமாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்க அணி முதல் 25 ஓவர்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், தென்னாப்பிரிக்காவின் கேப்டனும், தொடக்க வீராங்கனையுமான லாரா வோல்வார்ட் 98 பந்துகளில் 101 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பந்துவீச்சில் இந்திய வீராங்கனைகள் ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா ஆகியோர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.

முதல்முறையாக... 

45.3 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதன்மூலம், 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றிபெற்ற இந்திய அணியின் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரூ.51 கோடி பரிசு...

இந்த நிலையில் உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ.51 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பி.சி.சி.ஐ.யின் செயலர் தேவஜித் சைகியா வெளியிட்டுள்ளார். இந்த பரிசுத்தொகை வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்பட அனைவருக்கும் பரிந்தளிக்கப்படவிருக்கிறது. அதேசமயம் சாம்பியன் அணியான இந்திய மகளிர் அணிக்கு ஐ.சி.சி. தரப்பில் ரூ.39.78 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து