எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: பவதாரிணி நினைவாக இசைக்குழுவை இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகம் செய்தார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி. பின்னணி பாடகியான இவர், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு கொழும்பில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் மகள் பவதாரிணிக்காக, ஆர்கெஸ்ட்ரா ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறியிருந்தார் இளையராஜா.
இந்நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திறமை, விருப்பம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறும் இளையராஜா கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் `என்னுடைய மகள் பவதராணியின் நினைவாக, ‘பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா’வை உருவாக்க முடிவெடுத்திருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக திறமையுள்ள பெண் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் [email protected] என்கிற மெயிலுக்கு தங்களின் விவரங்களை அனுப்பலாம்' என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


