முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தரிசனம்

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      ஆன்மிகம்
Sabarimala 2023 04 10

திருவனந்தபுரம்,  சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17-ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தினமும் அதிகாலை 3 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டல சீசனில் நேற்றுமுன்தினம் தான் பக்தர்கள் வருகை மிக அதிகமாக காணப்பட்டது. நேற்று முன்தினம் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் 85,318 பக்தர்கள் முன்பதிவு செய்து இருந்தனர். இவர்களில் நேற்று முன்தினம் இரவு வரை 84 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

மேலும் நிலக்கல், பம்பை, திருவனந்தபுரம், எருமேலி உள்பட கேரளாவில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்த 15 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும் தரிசனம் செய்தனர். 

எனவே மொத்தமாக நேற்று முன்தினம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் குவிந்ததை தொடர்ந்து அதிகாலை முதல் இரவு வரை 18-ம் படி முன்பு பக்தர்களின் நீண்ட வரிசை காணப்பட்டது. நெய் அபிஷேகம் செய்வதற்கும், அப்பம் -அரவணை பிரசாதம் வாங்குவதற்கும் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர். 

நேற்றும் அதிகாலை முதலே சபரிமலையில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர். வரும் நாட்களில் பக்தர்கள் வருகை மிக அதிகமாக இருக்கும் என்பதால் சபரிமலையில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 6 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 2 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து