முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்கலம் மூலம் விலங்குகளை விண்ணுக்கு அனுப்பிய ஈரான்

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      உலகம்
Iran 2023-12-06

Source: provided

டெக்ரான் : மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் உள்ள ஈரான், தற்போது விலங்குகளைக் கொண்ட விண்கலன் ஒன்றினை விண்ணுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

சுற்றுவட்டப் பாதையில் 130 கிலோ மீட்டர் தொலைவுக்கு அந்த விண்கலன் அனுப்பப்பட்டதாகத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் இஸா சரேபூர் தெரிவித்துள்ளார். 500 கிலோ எடை கொண்ட அந்த விண்கலனில் என்ன விலங்குகள், எத்தனை விலங்குகள் அனுப்பப்பட்டன என்பதைக் குறிப்பிடவில்லை. 

ஈரான் கடந்த 2013-ல் விண்கலன் மூலம் குரங்கு ஒன்றினை வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்று வரச் செய்ததாகத் தெரிவித்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில், தரவுகளைச் சேகரிக்கும் செயற்கைக்கோள் ஒன்றினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாகத் தெரிவித்தது. விரைவில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சிகளை ஈரான் மேற்கொண்டு வருகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து