முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுநல மனுக்களை தாக்கல் செய்வது எப்படி? - ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தல்

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

Source: provided

மதுரை : ஆவணங்கள் இல்லாமல் புகைப்படம் உள்ளிட்ட சில தகவலின் அடிப்படையில் தாக்கல் செய்யப்படும் பொதுநல மனுக்களில் உரிய நிவாரணம் வழங்க முடியாது என உயர் நீதிமன்றக் கிளை கூறியுள்ளது.

மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய கட்டிடம் கட்ட உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் உயர் நீதிமன்ற கிளையில் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: "பொது நல மனுக்கள் தாக்கல் செய்வோர்கள் உரிய கள ஆய்வு மேற்கொண்ட பிறகு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்குகளில் மனுதாரர்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பி, அந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அவகாசம் வழங்கி, அதன் பிறகே நீதிமன்றத்துக்கு வர வேண்டும்.

பொது நல வழக்கு தாக்கல் செய்யும் மனுதாரர், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்று மனுவுடன் தாக்கல் செய்வது கூடுதல் பலமாக இருக்கும். அதைவிடுத்து புகைப்படங்கள் உள்ளிட்ட சில தகவல்களுடன் மட்டும் பொது நல மனுக்களை தாக்கல் செய்தால் உரிய நிவாரணம் வழங்க இயலாது. மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து