முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி: இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு டிச. 21-ம் தேதி தேர்தல் அறிவிப்பு

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      விளையாட்டு
Wrestler 2023-05-14

Source: provided

புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு டிச. 21-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு...

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரிஜ் பூஷன் தலைமையிலான மல்யுத்த கூட்டமைப்பை விளையாட்டு அமைச்சகம் சஸ்பெண்ட் செய்தது. அதன்பின் மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க பூபேந்தர் சிங் தலைமையில் அடாக் கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது.

இடைக்கால தடை.... 

இதற்கிடையே இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 12ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலும் தயாரானது. ஆனால், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. அதன்பின் இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதையடுத்து தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை.... 

இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரி எம்எம் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேட்பாளர் இறுதிப் பட்டியலை வெளியிடும் அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துவிட்ட நிலையில், இனி வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகளை அறிவிக்கும் பணிகள் மட்டும் உள்ளன என தெரிவித்துள்ளார்.

வழக்கின் தீர்ப்புக்கு... 

21ம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகளை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும், தேர்தல் முடிவுகளை வெளியிடுவது பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பிற்கு உட்பட்டது என்றும் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து