முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீரியல் நடிகையை கரம்பிடித்த ஜெயிலர் பட நடிகர் கிங்ஸ்லி

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      சினிமா
Kingsley-Sangita 2023-12-10

Source: provided

சென்னை : ஜெயிலர் படத்தில் நடித்த பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லி, சீரியல் நடிகையான சங்கீதா பாரிஸ் ஜெயராஜை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைபடங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. வித்தியாசமான உடல் மொழியில் சிரிக்க வைக்கும் இவரது நகைச்சுவைக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. நெல்சன் இயக்கத்தில் கோலமாவு கோகிலா படத்தில் அறிமுகமான இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் வந்து வெற்றி பெற்ற ஜெயிலர், மார்க் ஆண்டனி படங்களிலும் இவர் நடித்திருந்தார். இவர் நடித்த அன்னபூரணி, கான்ஜூரிங் கண்ணப்பன் ஆகிய படங்கள் தற்போது திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. சூர்யாவின் கங்குவா படத்திலும் நடித்து வருகிறார். 

46 வயதான ரெடின் கிங்ஸ்லிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் தனி கவனம் பெற்று வரும் காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதா பாரிஸ் ஜெயராஜை திருமணம் செய்துள்ளார். இவரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணம் செய்து கொண்டுள்ள ரெடின் மற்றும் சங்கீதா தம்பதிக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து  வருகின்றனர்.  

சீரியல் நடிகை சங்கீதா பாரிஸ் ஜெயராஜ், மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். தற்போது இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். 

நடன இயக்குநர் சதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில்,  இது எந்தப் படத்தின் படப்பிடிப்பும் அல்ல,  நிஜமாகவே கல்யாணம் நடந்து விட்டது. வாழ்த்துகள் ரெடின் கிங்ஸ்லி. பிளாக்பஸ்டர் வாழ்க்கை அமைய வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 11 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago
View all comments

வாசகர் கருத்து