முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிர்புர் பிட்ச் என்னுடைய வாழ்நாளில் பார்த்ததிலேயே மிகவும் மோசமானது - டிம் சவுதி

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      விளையாட்டு
New-Zealand 2023-12-10

Source: provided

டாக்கா : நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து வங்காளதேசம் வெற்றி பெற்றது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்புர் மைதானத்தில் கடந்த 6ம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில் 172 ரன்களும், தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 180 ரன்களும் எடுத்தன.இதையடுத்து 8 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

35 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 39.4 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.முன்னதாக மிர்புர் மைதானத்தில் நடைபெற்ற  2-வது டெஸ்ட் போட்டி, 2வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்தான நிலையிலும்  3வது நாளின் மதியத்திற்குள் முடிவு கிடைத்து விட்டது. வெறும் 170 ஓவர்களிலேயே இந்த டெஸ்ட் போட்டி முடிவிற்கு வந்தது. அந்த வகையில் ஒன்றரை நாளில் முடிந்த இப்போட்டியின் பிட்ச் தம்முடைய வாழ்நாளில் பார்த்ததிலேயே மிகவும் மோசமானது என்று நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி விமர்சித்துள்ளார். 

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "இந்த பிட்ச்சை பற்றி சொல்வதற்கு எனக்கு நிறைய குறைகள் உள்ளன. இப்போட்டி வெறும் 170 ஓவர்களில் முடிந்ததே பிட்ச் எப்படி இருந்தது என்பதை காண்பிக்கிறது. இது நன்றாக இல்லை. இதில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமான போட்டி இருக்கவில்லை. இது என்னுடைய கேரியரில் நான் பார்த்த பிட்ச்களில் மிகவும் மோசமானது" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 5 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 day ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து