முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன் இருக்கையில் இருந்தவர் சீட் பெல்ட் அணியவில்லை: கேரள முதல்வர் பினராயின் காருக்கு ரூ.500 அபராதம்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2024      இந்தியா
Pinarayi-Vijayan 2023 04 12

Source: provided

திருவனந்தபுரம் : காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தவர் சீட் பெல்ட் அணியாதது கேமராவில் பதிவானதை தொடர்ந்து கேரள முதல்வர் பினராய் விஜயனின் காருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த டிசம்பர் 12-ம் தேதி மாலை 4 மணியளவில் கோட்டயம் அருகே உள்ள முண்டக்கயம்- குட்டிக்கானம் சாலையில் முதல்வர் பினராய் விஜயனின் கார் சென்றது. ஆனால் அப்போது அந்தக் காரில் பினராய் விஜயன் பயணம் செய்யவில்லை. அவரது பாதுகாவலரும், அதிகாரிகளும் மட்டுமே அதில் இருந்தனர். 

காரின் முன் சென்ற பஸ்சில் பினராய் விஜயன் இருந்தார். காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் சீட் பெல்ட் அணியவில்லை. இது அங்கு இருந்த செயற்கை நுண்ணறிவு கேமராவில் பதிவானது. இதைத் தொடர்ந்து பினராய் விஜயனின் காருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. 

இதற்கான நோட்டீஸ் திருவனந்தபுரத்திலுள்ள அவரது அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதமே நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதிலும் இதுவரை அபராதத் தொகையை கட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து